இளம்பெண் மாயம்
புதுச்சேரி,: சிறப்பு வகுப்புக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஏம்பலம் குளத்துமேட்டு தெருவைச் சேர்ந்தவர் ஜெயந்தி, 23; பட்டதாரி. இவர் ரெட்டியார்பாளையத்தில் உள்ள தனியார் அகடாமியில் சிறப்பு வகுப்புக்கு சென்று வருகிறார். கடந்த 11ம் தேதி காலை 6 மணிக்கு சிறப்பு வகுப்புக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து அவரது தந்தை தங்கராசு அளித்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து ஜெயந்தியை தேடி வருகின்றனர்.