உள்ளூர் செய்திகள்

வாலிபர் மாயம்

புதுச்சேரி: போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற வாலிபர் மாயம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருக்கனுார், ஐஸ்வர்யம் நகரைச் சேர்ந்தவர் சக்திவேல், 28. இவர், வில்லியனுாரில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று, அங்கே வேலை செய்து வந்தார். கடந்த 11ம் தேதி காலை காய்கறி வாங்க கடைக்கு சென்றவர் இதுவரை போதை மறுவாழ்வு மையத்திற்கு வரவில்லை. வீட்டிற்கும் செல்லவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை