உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஹார்டுவேர் கடையில் திருட்டு

ஹார்டுவேர் கடையில் திருட்டு

திருபுவனை: விழுப்புரம் மாவட்டம், கெங்கராம்பாளையம் அடுத்த பூசாரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ், 42. இவர், புதுச்சேரி மதகடிப்பட்டு - கரியமாணிக்கம் மெயின் ரோட்டில் ஜி.ஆர்.பி., வணிக வளாகத்தில் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். கடந்த 12ம் தேதி இரவு 9:00 மணியளவில் வழக்கம் போல் கதவை பூட்டிவிட்டு சென்றார். நேற்று முன்தினம் காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது டேபிள் டிராயரில் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாய் திருடு போயிருந்தது. அவரது புகாரின் பேரில், திருபுவனை இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஆகியோர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !