வாசகர்கள் கருத்துகள் ( 1 )
திக., திமுக காரனுங்க பீத்தவாய் லியோனி உள்பட அங்கே இருப்பானுங்களே?
காரைக்கால் : காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி தெப்போற்சவம் நடந்தது.காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். கோவிலின் பிரம்மோற்சவ விழா கடந்த 23ம் தேதி துவங்கியது. தினம் விநாயகர், சுப்ரமணியர், அடியார் நால்வர் புஷ்ப பல்லாக்கு உற்சவம் வீதியுலா மற்றும் செண்பகத்தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளல் நடந்தது.அதனை தொடர்ந்து பஞ்சமூர்த்தி விதியுலா, தேர்திருவிழா, தங்க காகவாகனம் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் தெப்போற்சவம் நடந்தது. நேற்று பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் காட்சி கொடுக்க நிகழ்ச்சியில் விசாக தீர்த்தம் நடந்தது.நிகழ்ச்சியில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமி, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திக., திமுக காரனுங்க பீத்தவாய் லியோனி உள்பட அங்கே இருப்பானுங்களே?