உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அனல் மின் நிலைய போராட்டம் ஒத்திவைப்பு

அனல் மின் நிலைய போராட்டம் ஒத்திவைப்பு

மந்தாரக்குப்பம்: நெய்வேலி அடுத்த ஊத்தங்காலில் உள்ள தனியார் அனல்மின் நிலைய (எம்.இ.ஐ.எல்) ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 5:00 மணிக்கு, கடலுார் தொழிலாளர் உதவி ஆணையர் ஞானவேல் தலைமையில்பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில் நிர்வாகம் தரப்பில் தினக் கூலியாக ரூ.902 தருவதாக கூறினர். ஆனால், தொழிலாளர்கள் ரூ.1,007 கேட்டனர். பின்னர், தீபாவளி பண்டிகையொட்டி போராட்டத்தை தற்காலிமாக கைவிட்டு பணிக்கு திரும்புவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் 17 ம் தேதி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி