உடனே பதிவு செய்யுங்கள்'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கில் தினமும் காலை மற்றும் மாலையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க www.kalvimalar.comஎன்ற இணையதளத்தில் உடனே பதிவு செய்யுங்கள். இதேபோல் HI என்று 9150574442 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் அனுப்பி பங்கேற்க பதிவு செய்யலாம்.
இன்றைய அமர்வில்
கல்வியாளர்கள்தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று (29ம் தேதி) காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 வரை நடக்கும் அமர்வில், 'எதிர்கால பொறியியல் படிப்புகள்' என்ற தலைப்பில், ஸ்ரீகிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ் பேராசிரியர் பென்ரூபன், விண்வெளி அறிவியல் படிப்புகள் குறித்து இஸ்ரோவை சேர்ந்த ராஜராஜன், சி.ஏ.,- சி.எம்.ஏ.,- ஏ.சி.எஸ்., படிப்புகள் குறித்து ஆடிட்டர் சேகர் ஆகியோர் விளக்கம் அளிக்க உள்ளனர்.மாலை 3:00 முதல் 5:30 வரை நடக்கும் அமர்வில், 'விஞ்ஞானியாக மாறுவது எப்படி' என, டி.ஆர்.டி.ஏ., அதிகாரி டில்லிபாபு, மரைன் கேட்டரிங் ஓட்டல் மேலாண்மை படிப்புகள் குறித்து சுரேஷ்குமார், கேரியர் கவுன்சிலிங் குறித்து அஸ்வின் விளக்கம் அளிக்கின்றனர்.
அசத்தலான ட்ரோன்கள்
'ட்ரோன்கள்' எனப்படும் ஆளில்லா விமானங்களின் பயன்பாடு இந்தியாவில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. மத்திய அரசும் ட்ரோன்கள் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. வேளாண்மை, கட்டுமானம், மருத்துவம், நீர் மேலாண்மை, காவல் என பல்வேறு துறைகளிலும் ட்ரோன்கள் பரவலாக பயன் படுத்தப்படுகின்றன.இயற்கை பேரிடர் காலங்களில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ட்ரோன்கள் மிகவும் பயனளிக்க கூடியவையாக உள்ளன. ட்ரோன் தொழில்நுட்பம் குறித்து புரிந்து கொள்ள மாணவர்களுக்கு அரிய வாய்ப்பினை 'தினமலர்' நாளிதழ் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. வழிகாட்டி நிகழ்ச்சிக்கு மிஸ் பண்ணாமா வந்துடுங்க.