மேலும் செய்திகள்
ஐயப்பன் கோவிலில் அன்னதானம்
25-Nov-2024
வில்லியனுார், : வில்லியனுார், கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஐயப்ப சுவாமிக்கு திருவிளக்கு பூஜை, 1,008 சங்கு பூஜை நேற்று நடந்தது.இதையொட்டி நேற்று முன்தினம் மாலை முதல் கால யாக சாலை பூஜை மற்றும் சங்கு பூஜை நடந்தது.நேற்று காலை இரண்டாம் கால யாக சாலை பூஜை, தொடர்ந்து சங்கு அபிேஷகம் நடந்தது.தொடர்ந்து மகா தீபாராதனை, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மாலையில் சிறுவர்களின் விளக்கு தீபத்துடன் அலங்கரிக்கப்பட்ட ஐயப்ப சுவாமி மாட வீதியுலா நடை பெற்றது. இரவு 8:00 மணிக்கு பக்தி பாமாலை இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம் தரிசனம் செய்தார்.
25-Nov-2024