உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தனியார் பள்ளி ஆசிரியைக்கு மிரட்டல்

தனியார் பள்ளி ஆசிரியைக்கு மிரட்டல்

புதுச்சேரி: கொடுத்த கடனை திருப்பி கேட்ட தனியார் பள்ளி ஆசிரியைக்கு மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.திலாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா, 42.இவர், புனிதா என்பவரின் வீட்டில் போக்கியத்திற்கு வசிக்கிறார். இதற்காக ரூ. 4 லட்சம் கொாடுத்துள்ளார். அதேபோல் இன்னொரு போஷனில் போக்கியம் உள்ள ஜெயந்தியிடம் ரூ. 6 லட்சம் புனிதா வாங்கியுள்ளார்.போக்கியம் காலம் முடிந்ததால், கொடுத்த பணத்தை புனிதாவிடம் கேட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 10ம் தேதி ஜெயந்தி வீட்டுக்கு சென்ற புனிதா, அவரது மகள் தாரணியை தகாத வார்தைகளால் திட்டி மிரட்டினார். பின் சங்கீதா வீட்டிற்கு சென்ற புனிதா, அவரது கணவர் ராமு, மகன் விக்னேஷ், மகள் அர்ச்சனா ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டினார். இதுகுறித்து சங்கீதா கோரிமேடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை