உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வீடு புகுந்து தம்பதியை மிரட்டி நகை கொள்ளை: மூவர் கைது

வீடு புகுந்து தம்பதியை மிரட்டி நகை கொள்ளை: மூவர் கைது

புதுச்சேரி : புதுச்சேரியில் வீடு புகுந்து தம்பதியை மிரட்டி 15 சவரன் நகை, ரூ.1.70 லட்சம் பணம் கொள்ளையடித்த மூவரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி புதுசாரம், சின்னையன்பேட், அய்யப்பன் நகரைச் சேர்நத்வர் சங்கர் (எ) பரணி,26; இவரது மனைவி சித்ரா. இருவரும் இ.சி.ஆரில், பழக்கடை நடத்தி வருகின்றனர். கடந்த 31ம் தேதி இரவு வியாபாரம் முடித்து சித்ரா மற்றும் சங்கர் வீட்டிற்கு திரும்பினர்.ஏற்கனேவே வீட்டில் பதுங்கி இருந்த 3 பேர் கத்தி காட்டி மிரட்டி, தம்பதியை அறையில் அடைத்து வைத்து 15 சவரன் நகை, ஆப்பிள் ஐபோன், சி.சி.டி.வி., கேமரா காட்சிகள் பதிவாகும் டி.வி.ஆர்., பாக்சையும் எடுத்துச் சென்றனர். புகாரின் பேரில், கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.அதில், வாணரப்பேட்டை, நேரு வீதியைச் சேர்ந்த ஸ்ரீராம், 39; லாஸ்பேட்டை லஷ்மி நகர், பாரதிதாசன் வீதி நிவாஸ், 26; புத்துப்பட்டு, நம்பிய நல்லுார், அனிச்சங்குப்பம் சூரி (எ) சதீஷ், 29; என தெரியவந்தது. அவர்களை நேற்று முன்தினம் மாலை மேட்டுப்பாளையம் கனரக வாகன முனையம் அருகே காரில் சென்றபோது, கைது செய்தனர். விசாரணையில், சங்கர் வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1.7 லட்சம் பணம் மற்றும் 15 சவரன் நகைகள் மற்றும் திருட்டிற்கு பயன்படுத்திய 3 கத்திகள், கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.சீனியர் எஸ்.பி., கலைவாணன் கூறுகையில்; திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீராம் மீது 3 கொலை வழக்கு; நிவாஸ் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை விரைவாக கைது செய்து, நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்த இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், கோவிந்தன், ராஜீ மற்றும் போலீசாருக்கு பாராட்டுகள் என்றார். குழந்தைக்கு பொம்மை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இந்த கும்பல், வீட்டில் உள்ள குழந்தைகள் அழாமல் இருப்பதற்காக, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மிக்கி மவுஸ் பொம்மை ஒன்றையும் கையில் எடுத்து சென்றுள்ளனர். முதலில் குழந்தைக்கு பொம்மையை கொடுத்து தன் வசப்படுத்தி கொண்டு பெற்றோரை மிரட்டி பணம் நகை திருடியது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ