உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய மூவருக்கு வலை

வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய மூவருக்கு வலை

புதுச்சேரி: பீர்பாட்டிலால் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.மேட்டுப்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விமல், 27; அதே பகுதியில் உள்ள தனியார் பார் சப்ளையர். அந்த பார்க்கு நேற்று மதியம் 2:00 மணிக்கு மணவெளி பூத்துறை சேர்ந்த செந்தில்குமார், 32; சுந்தரமூர்த்தி, 27; கணபதி, 29, ஆகியோர் மது குடிக்க வந்தனர்.மூவரும் பாரில் அதிக நேரம் உட்கார்ந்து கொண்டு, அங்கு குடித்த மற்றவர்களுக்கு இடையூறாக இருந்தனர். இதனை முருகன் தட்டிக்கேட்டார்.ஆத்திரமடைந்த மூவரும் முருகனை பீர்பாட்டிலால் தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை