கஞ்சா விற்ற மூவர் கைது
வில்லியனுார் : வில்லியனுாரில் கஞ்சா விற்பனை செய்த மூன்று -பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வில்லியனுார் சாமியார்தோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையில் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று கஞ்சா விற்பனை செய்த இளைஞர்கள் மூவரை பிடித்து ஸ்டேஷன் கொண்டு சென்றனர். விசாரணையில் கணுவாப்பேட்டையை சேர்ந்த மூர்த்தி மகன் விண்ணரசன் (எ) தினேஷ், 24 மற்றும் இரண்டு பேரும் சிறுவர்கள் என தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரம் மதிப்பிலான 500 கிராம் கஞ்சா, ஒரு செல்போன் ஆகிய வற்றை பறிமுதல் செய்த னர். அதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி தினேஷ் சிறையிலும், இரு சிறுவர்களை சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.