உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு மருத்துவமனை டாக்டரை தாக்கிய மூன்று பேருக்கு வலை

அரசு மருத்துவமனை டாக்டரை தாக்கிய மூன்று பேருக்கு வலை

காரைக்கால்: காரைக்கால் அரசு பொது மருத்துவமனை டாக்டரை தாக்கிய மூன்று பேரை போலீ சார் தேடிவருகின்றனர். காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் நேற்று அதிகாலை நகர் பகுதியை சேர்ந்த டாக்டர் சக்திமைந்தன்.24; பணியில் இருந்துள்ளார். அப்போது விபத்தில் காயமடைந்த நோயாளி ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்து வந்தனர். அந்த நோயாளியை உடன் அவசர சிகிச்சை முதன்மைப் பகுதிக்கு அழைத்துச் செல்லுமாறு டாக்டர் கூறினார். அப்போது மதுபோதையில் இருந்த நோயாளியுடன் வந்த மூன்று பேர் டாக்டரிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை ஆபாசமான பேசி தாக்கினர். இதில் காயம் அடைந்த சக்திமைந்தன் அரசு மருந்துமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர் சக்திமைந்தன் புகாரின் பேரில் நகர் இன்ஸ்பெக்டர் அறிவுசெல்வம் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அடையாளம் தெரியாத மூன்று பேர் மீது வழக்குப் பதிந்து தேடிவருகின்றனர். அரசு மருத்துவமனையில் பணியிலிருந்து டாக்டரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !