மேலும் செய்திகள்
ஆபாச பேச்சு :இருவர் கைது
10-Jun-2026
நெட்டப்பாக்கம்: ஜூலை 6-: மடுகரை போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது கடலுார் மாவட்டம், பகண்டை பகுதியைச் சேர்ந்த அருண், 29, என்பவர் மதுபோதையில் மடுகரை பாதையில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார். போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். இதேபோல் காலப்பட்டு சந்திப்பில் மதுபோதையில் பொதுமக்களை ஆபாசமாக திட்டிய காஞ்சிபுரம் மாவட்டம், முகையூர் பகுதியைச் சேர்ந்த பிரபு, 43, கரிக்கலாம்பாக்கம் பகுதியில் ஆபாசமாக பேசிய குட்டியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த அம்பேத்து, 35, ஆகியோரை அந்தந்த போலீசார் கைது செய்தனர்.
10-Jun-2026