உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுப்ரமணியபாரதி பள்ளிக்கு திருவள்ளுவர் - வாசுகி விருது

சுப்ரமணியபாரதி பள்ளிக்கு திருவள்ளுவர் - வாசுகி விருது

புதுச்சேரி : திருக்கனுார் சுப்ரமணியபாரதி மேல்நிலைப் பள்ளியின் கல்வி சேவையை பாராட்டி பள்ளிக்கு விருது வழங்கப்பட்டது.திருக்குறள் சங்கமம் சார்பில் திருவள்ளுவர் தின விழாவையொட்டி, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு, திருக்குறள் குறித்த வினாடி வினா போட்டி மற்றும் மற்றும் பரிசளிப்பு விழா தமிழ்ச்சங்கத்தில் நடந்தது. விழாவிற்கு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை பிரிவு செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். திருக்குறள் சங்கமம் தலைவர் வேல்சொக்கநாதன் வரவேற்றார்.போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு துணை சபாநாயகர் ராஜவேலு, முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயபால் ஆகியோர் பரிசு வழங்கினர். தமிழ்ச்சங்கத் தலைவர் முத்து, மத்திய கலால் துறை கடலுார் துணை ஆணையர் சண்முகசுந்தரம் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் திருக்கனுார் சுப்ரமணியபாரதி மேல்நிலைப் பள்ளியின் கல்வி சேவையை பாராட்டி, பள்ளி நிர்வாகி சம்பத், துணை முதல்வர் சுசீலாசம்பத் ஆகியோருக்கு சிறந்த கல்வி சேவைக்கான 'திருவள்ளுவர்-வாசுகி' விருதினை துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை