மேலும் செய்திகள்
உயர் ரத்த அழுத்த தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
11-Jun-2025
புதுச்சேரி: அரசு நலவழித்துறை, தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம், அரசு மார்பு நோய் நிலையம் மற்றும் லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.லாஸ்பேட்டை துரைசாமி அரசு உயர்நிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஆசிரியர் அருணா வரவேற்றார். ஆரம்ப சுகாதார நிலைய பொறுப்பு மருத்துவ அதிகாரி பத்மினி, டாக்டர் யுவராஜ், தலைமை ஆசிரியர் உஷா தலைமை தாங்கினர்.அரசு மருத்துவக் கல்லுாரி டாக்டர் ஹரிகிருஷ்ணா, ஆலோசகர் பூஷனம், மருத்துவ சமூக பணியாளர் பழனிவேல் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவக் கல்லுாரி பயிற்சி டாக்டர்கள் உலக புகையிலை எதிர்ப்பு தினம் குறித்தும், கருப்பொருள் குறித்தும், மாணவ, மாணவியருக்கு புகைப்படத்துடன் விளக்கம் அளித்தனர். புகையிலை எதிர்ப்பு தின உறுதிமொழியை பயிற்சி டாக்டர்கள் வாசிக்க, மாணவர்கள் உட்பட அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ஏற்பாடுகளை சுகாதார உதவி ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், ஹுமாயூன், ரேணுகாதேவி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.சுகாதார உதவி ஆய்வாளர் ஜெகநாதன் நன்றி கூறினார்.
11-Jun-2025