காரைக்காலில் இன்று உள்ளூர் விடுமுறை
காரைக்கால்: காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரீப் கந்துாரி விழாவை முன்னிட்டு இன்று (29ம் தேதி) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதற்குபதில் வரும் 7ம் தேதி அனைத்து பள்ளிகள், கல்லுாரிகள் வழக்கம் போல் இயங்கும். மேலும் செய்முறை தேர்வுகள் மற்றும் முன்பருவ தேர்வுகள் இருப்பின் அவை திட்டமிட்டபடி நடைபெறும். இத்தகவலை கலெக்டர் ரவிபிரகாஷ் தெரிவித்துள்ளார்.