உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வேதபாரதி சார்பில் இன்று மார்கழி மாத பஜனை

வேதபாரதி சார்பில் இன்று மார்கழி மாத பஜனை

புதுச்சேரி : வேதபாரதி சார்பில் மார்கழி மாத பஜனை இன்று காலை காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவிலில் இருந்து துவங்குகிறது. நாட்டின் பண்பாடு, கலாசாரத்தை காக்கும் பணியை புதுச்சேரியில் கடந்த 7 ஆண்டுகளாக வேதபாரதி செய்து வருகிறது. இந்த அமைப்பு, கடந்த 6 ஆண்டுகளாக மார்கழி மாத வீதி பஜனையும், நிறைவாக ராதா மாதவ திருக்கல்யாண வைபம் நடத்தி வருகிறது.இதன் தொடர்ச்சியாக, அடுத்த தலைமுறையினர் நெறி சார்ந்த பாதையில் செல்லவும், பாரம்பரிய கலாசாரம் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளி மாணவ மாணவிகளை ஒருங்கிணைத்து, மார்கழி மாத பஜனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள், புத்தாண்டு விடுமுறை நாளான இன்று 1ம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.காலை 6:00 மணிக்கு காந்தி வீதி, வேதபுரீஸ்வரர் கோவில் வாசலில் துவங்கும் மார்கழி மாத பஜனையில், 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்கின்றனர். வேதபாராயணம், பஜனை, கோலாட்டம், கும்மியாட்டம், பரதம், திருப்பாவை, திருவெம்பாவை என பக்தியுடன் செல்லும் பஜனை மாட வீதிகள் வழியாக சென்று காலை 8:30 மணிக்கு வரதராஜ பெருமாள் கோவிலில் நிறைவு பெறுகிறது. வரும் 11 மற்றும் 12ம் தேதி, சித்தன்குடி, ஜெயராம் திருமண மண்டபத்தில், ராதா மாதவ திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை புதுச்சேரி வேதபாரதி செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி