உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுற்றுலா பயணியை மீட்ட லைப் கார்டுகள்

சுற்றுலா பயணியை மீட்ட லைப் கார்டுகள்

புதுச்சேரி: திருப்பூரில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த இருவர் தலைமைச் செயலகம் எதிரே உள்ள கடற்கரையில், மது போதையில் இறங்க முயன்றனர். அப்போது, கடற்கரையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல்படையினர் மற்றும் லைப் கார்டுகள் கடலில் இறங்க வேண்டாம் என இருவரையும் எச்சரித்தனர். ஆனால், அவர்களின் எச்சரிக்கையை மீறி இருவரும் கடலில் இறங்கி குளித்தபோது, எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். அப்போது கடலில் இருந்த பாறையில் மோதி செந்தில் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைக் கண்ட பாதுகாப்புப் பணியில் இருந்த லைப் கார்டுகள் ரமேஷ், ஜெயக்குமார் ஆகியோர் உடனடியாக கடலில் இறங்கி, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த செந்திலை பத்திரமாக மீட்டனர். பின், காயமடைந்த செந்திலை புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை