உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரிக்கு படையெடுக்க துவங்கிய சுற்றுலா பயணிகள்

புதுச்சேரிக்கு படையெடுக்க துவங்கிய சுற்றுலா பயணிகள்

புதுச்சேரி: புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளின் வருகை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க துவங்கி உள்ளது.புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. குறிப்பாக, வார விடுமுறை தினங்களில், வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருந்தது. 'பெஞ்சல்' புயல் காரணமாக, கடந்த வாரம் சுற்றுலா பயணிகளின் வருகை முற்றிலும் குறைந்தது. வரலாறு காணாத வகையில் பெய்த மழையால், பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கின. தற்போது இயல்பு நிலை மீண்டும் திரும்பிய நிலையில் தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பயணிகள், கொஞ்சம் கொஞ்சமாக வரத்துவங்கி உள்ளனர். இன்னும் சில தினங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை, வழக்கம் போல அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ