மேலும் செய்திகள்
ஆபத்தை உணராமல் கடலில் குளியல்
14-Oct-2024
புதுச்சேரி : தொடர் விடுமுறையொட்டி, புதுச்சேரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது.புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளி நாடு, வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். வார விடுமுறை மற்றும் தீபாவளி பண்டிகை என 5 நாட்கள் தொடர் விடுமுறையால் புதுச்சேரிக்கு தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வந்தனர்.அவர்கள், கடற்கரை, பூங்கா, அரவிந்தர் ஆசிரமம், நோணாங்குப்பம் படகு குழாம், மனக்குள விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றிபார்த்தனர். விடுமுறையின் இறுதி நாளான நேற்று புதுச்சேரி கடற்கரை சாலையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
14-Oct-2024