கால்நடைகளுக்கு பாரம்பரிய வைத்தியம்
நெட்டப்பாக்கம்: புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை பண்ணை தகவல் ஆலோசனை மையம் சார்பில், கால்நடைகளுக்கு பாரம்பரிய நாட்டு வைத்தியம் அளிப்பது குறித்த செயல் விளக்கம் புதுக்குப்பம் கிராமத்தில் நடந்தது.வேளாண் அலுவலர் தினகரன் தலைமை தாங்கினார். புதுச்சேரி நம்மாழ்வார் நாட்டு வைத்தியர் செங்கீரன் கால்நடைகளுக்கு ஏற்படக்கூடிய நோய்களை நாட்டு வைத்தியத்தின் மூலம் குணப்படுத்தும் மருந்துகள் செய்வது குறித்து பயிற்சி அளித்தார்.கால்நடைத் துறை இணை இயக்குனர் குமாரவேல், மாடுகளுக்கு ஏற்படக்கூடிய நோயினை எவ்வாறு பேணிக்காப்பது. அவற்றை தடுப்பது எப்படி என்பது குறித்து விளக்கினார். கால்நடை மருத்துவர் செல்வமுத்து கால்நடைகளுக்கு மருந்து வழங்கும் முறை குறித்து விளக்கினார்.ஜவஹர்லால் நேரு வேளாண் அறிவியல் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள், கால்நடைகளுக்கு ஏற்படக்கூடிய நோய்கள், அறிகுறிகள், அதனை தடுக்கும் மூலிகைகள் குறித்து விவ சாயிகளுக்கு விளக்கினர்.முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் அம்மை நோய் தடுப்பு எதிர்ப்பு சக்தி மருந்து வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கரிக்கலாம்பாக்கம் உழவர் உதவியக ஊழியர் தம்புசாமி செய்திருந்தார்.