தனியார் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு
அரியாங்குப்பம்: தனியார் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து போக்குவரத்து சீனியர் எஸ்.பி., விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தவளக்குப்பம் அடுத்த டி.என்., பாளையம் சாலையில் உள்ள ஏ.ஜே., உயர்நிலைப்பள்ளியில் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (நவ.,26) நடந்தது. பள்ளி முதல்வர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் ஆனந்தி, மனோகரி வரவேற்றனர். தெற்கு பகுதி போக்குவரத்து எஸ்.பி., பக்தவச்சலம், இன்ஸ்பெக்டர் தன்வந்தரி, சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக, புதுச்சேரி போக்குரவத்து சீனியர் எஸ்.பி., திவ்யா போக்குரவத்து விதிமுறைகள் குறித்தும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது, ஹெல்மெட் அணிவது, சிக்னல் பகுதியில் விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.