உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆஷா பணியாளர்களுக்கு பயிற்சி

ஆஷா பணியாளர்களுக்கு பயிற்சி

புதுச்சேரி: ஜிப்மர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறை சார்பில், ஆஷா பணியாளர்களுக்கான உதடு பிளவு மற்றும் அண்ணப்பிளவு குறைபாடுகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ரவிகுமார் சிட்டோரியா ஊட்டசத்து குறித்த கல்வி காணொலியை வெளியிட்டார். ஜிப்மர் ஸ்மைல் ட்ரயின் பிளவு குறைபாடு திட்ட இயக்குனர் டாக்டர் தேவி பிரசாத் மொஹபத்ரா, திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி சிறப்புரையாற்றினார். பெங்களூருவை சேர்ந்த நடன அசைவு சிகிச்சையாளர், லட்சுமிதேவி நடன அசைவு சிகிச்சை குறித்து விளக்கம் அளித்தார். இதில் ஆஷா பணியாளர்கள், ஜிப்மர் பேராசிரியர்கள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி