| ADDED : டிச 08, 2025 05:16 AM
புதுச்சேரி: லாஸ்பேட்டை, காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தாவரவியல் துறை சார்பில் பயிற்சி பட்டறை நடந்தது. பயிற்சி பட்டறை ஒருங்கிணைப்பாளர் குமரேசன் வரவேற்றார். தாவரவியல் துறைத் தலைவர் பிஜயகுமார் நாயக் தலைமை தாங்கினார். நிறுவனத்தின் இயக்குநர் கோச்சடை பயிற்சி பட்டறையை துவக்கி வைத்து பேசினார். தாகூர் கல்லுாரி தாவரவியல் பேராசிரியர் விஜயன் 'மூலக்கூறு உயிரியல் நுட்பங்கள்' குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். தேர்வுக் கட்டுப்பாட்டாளர் அர்ச்சுனன் மற்றும் உள்தர மதிப்பீட்டு ஆய்வுக்குழு ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் வாழ்த்திப் பேசினர். இதில், பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பேராசிரியர்கள் குமரேசன், ஷெகாவத், விக்ராந்த், ஆனந்தி, ஜானகி மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.