உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  எஸ்.ஐ., ஏட்டுகள் இடமாற்றம்

 எஸ்.ஐ., ஏட்டுகள் இடமாற்றம்

புதுச்சேரி: பதவி உயர்வு பெற்ற 26 சப் இன்ஸ்பெக்டர்கள், 27 ஏட்டுகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி காவல்துறையில் பணியாற்றியவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, சமீபத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் 26 பேருக்கு, சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்தநிலையில் பதவி உயர்வு அளிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் 26 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதேபோல் பதவி உயர்வு பெற்ற 27 ஏட்டுகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை காவல்துறை தலைமையக போலீஸ் எஸ்.பி., மோகன்குமார் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை