உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

பாகூர் : பாகூர் அரசு நடுநிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது. புதுச்சேரி அரசு அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, அடுத்த 5 ஆண்டுகளில் பசுமை பரப்பை இரட்டிப்பாக்க முயற்சித்து வருகிறது. இதற்காக, ஒரு வீடு ஒரு மரம், நகர்ப்புற தோட்டம், கிராமப்புற காடு வளர்ப்பு, தோப்புகளை மீட்டெடுத்தல், பசுமை வளாகம் என நடப்பு பருவமழை காலத்தில் 1 லட்சம் மரக்கன்றுகளை நட உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, பாகூர் அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி தலைமை தாங்கினார்.புதுச்சேரி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒருங்கிணைப்பாளர் நித்யா பங்கேற்று மரம் வளர்ப்பது பற்றிய விழிப்புணர்வு உரையாற்றினார். பின்னர், பள்ளி வளாகத்தில் அத்தி, புங்கன், வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பிரபாவதி, சத்யவதி, துரைசாமி, பாக்கியலட்சுமி, தம்பி ராஜலட்சுமி, சங்கீதா, கார்த்திகேயன், மஞ்சு, ரம்யா, வினோத், செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி