மரக்கன்று நடும் நிகழ்ச்சி
புதுச்சேரி: பா.ஜ., நகர மாவட்ட ஓ.பி.சி., அணி சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை மாநில தலைவர் ராமலிங்கம் துவக்கி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி 75வது பிறந்த நாளை முன்னிட்டு, நாடு முழுதும் இரு வார சேவை விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி மாநில பா.ஜ., நகர மாவட்ட ஓ.பி.சி., அணி தலைவர் அய்யப்பன் தலைமையில் உழந்தை ஏரியில் 1,000 பனை விதைகள், 500 மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.மாநில தலைவர் ராமலிங்கம் தனது தாயின் பெயரில் மரம் நடும் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். செல்வம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் பாபு, ஓ.பி.சி., அணி தலைவர் கோவேந்தன் கோபதி, துணை தலைவர்கள் துரைசாமி, விஜயராஜ், பொது செயலாளர் சிவசெந்தில், மாநில பொது செயலாளர்கள் மோகன் குமார், லட்சுமி நாராயணன், துணைத் தலைவர் ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.