உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சுனாமி நினைவு தினம்: கவர்னர், முதல்வர் அஞ்சலி

 சுனாமி நினைவு தினம்: கவர்னர், முதல்வர் அஞ்சலி

புதுச்சேரி: புதுச்சேரியில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு கவர்னர், முதல்வர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீன்வர் நலத்துறை சார்பில், 21ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, கடற்கரை காந்தி சிலை பின்புற பகுதியில், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்.பி.,க்கள் வைத்திலிங்கம், செல்வணபதி மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்று கடலில் பால் ஊற்றி, மலர் வளையம் வைத்து, சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில், இணை இயக்குநர் தெய்வசிகாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். காங்., சார்பில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், துணை தலைவர் தேவதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். அ.தி.மு .க., சார்பில், மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில், வம்பாகீரபாளையம் சோனாம்பாளையம் சந்திப்பு, கடற்கரை காந்தி சிலை பகுதியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி, அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநில துணைச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பார்த்தசாரதி உடனிருந்தனர். ஏம்பலம் தொகுதி பனித்திட்டு, நரம்பை கிராமங்களில், லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்ட து. சுனாமி நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரியில் உள்ள 6 மீனவ கிராமங்கள், காரைக்காலில் உள்ள 6 கிராம மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் கடலில் மலர்கள் துாவி, பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை