உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காசநோய் கண்டறியும் முகாம்

காசநோய் கண்டறியும் முகாம்

திருக்கனுார்: தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட விழிப்புணர்வு பிரசார இயக்கம் சார்பில், காசநோய் கண்டறியும் பரிசோதனை முகாம் செட்டிப்பட்டில் நடந்தது.புதுச்சேரி சுகாதாரத்துறை,தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் துவங்கி நடந்து வருகிறது.அதன்படி, திருக்கனுார் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், பொது மக்களுக்கான காசநோய் பரிசோதனை முகாம் செட்டிப்பட்டில் நடந்தது.டாக்டர் குறிஞ்சிசெல்வன் தலைமை தாங்கினார். காசநோய் தடுப்பு சுகாதார செவிலியர் பொற்கிலை வரவேற்றார்.முகாமில், புதுச்சேரி அரசு காசநோய் மருத்துவமனை டாக்டர் பாலாஜி தலைமையிலான மருத்துவக் குழுவினர், பொதுமக்களுக்கு காசநோய் கண்டறியும் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டனர்.ஏற்பாடுகளை செவிலியர்கள் அம்பிகா, அஞ்சனாமற்றும் ஆஷா ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஏராளமானோர் பங்கேற்று, பரிசோதனை செய்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை