காசநோய் பரிசோதனை இயந்திரம் துவக்கி வைப்பு
புதுச்சேரி: கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் காசநோய் சோதனை இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில சுகாதார இயக்கம் மூலம், கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் சேவையை அங்கீகரிக்கும் வகையில், அரசு மூலம், காசநோய் சோதனை இயந்திரம் மருத்துவமனையில் நிறுவப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி மாநில சுகாதார இயக்க இயக்குனர் கோவிந்தராஜன் சோதனை இயந்திரத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாநில காசநோய் அதிகாரி வெங்கடேஷ், தக் ஷஷீலா பல்கலைக்கழக வேந்தரும், மணக்குள விநாயகர் கல்வி குழுமத் தலைவர் தனசேகரன், மணக்குள விநாயகர் கல்வி குழுமப் பொருளாளர் ராஜராஜன், செயலாளர் நாராயணசாமி, இணை செயலாளர் வேலாயுதம், மருத்துவமனை இயக்குனர் காக்னே, டீன் (கல்வி) கார்த்திகேயன், டீன் ஆராய்ச்சி சஞ்ஜய், மருத்துவ கண்காணிப்பாளர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.