புதிய டிரான்ஸ்பார்மரை எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
புதுச்சேரி: கணபதிசெட்டிக்குளம் சுனாமி குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட புதிய டிரான்ஸ்பார்மரை செந்தில் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார். காலாப்பட்டு மின்துறை இயக்குதல் மற்றும் பராமரிப்பு அலுவலகம் சார்பில், பெரிய காலாப்பட்டு, கணபதிச்செட்டிக்குளம் சுனாமி குடியிருப்புப் பகுதியில், நிலவிய மின்பற்றாக்குறையை போக்க ரூ. 22 லட்சம் மதிப்பில் புதிதாக டிரான்ஸ்பார்மர்கள், 14 உயர்மின்னழுத்த பாதை மற்றும் தானியங்கி டைமர் வசதியுடன் கூடிய தெருவிளக்குகள் அமைக்கப்பட்டன. அந்த புதிய டிரான்ஸ்பார்மர்களை மக்கள் பயன்பாட்டிற்கு செந்தில் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார். இதில், காலாப்பட்டு துணைப் பிரிவு உதவிப் பொறியாளர் ரவிச்சந்திரன், இளநிலைப் பொறியாளர் ஜெயபிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.