மேலும் செய்திகள்
ரத்தவெள்ளத்தில் சடலம் போலீசா் விசாரணை
06-Sep-2025
நெட்டப்பாக்கம் : முன்விரோதத்தில் முதியவர் கடையை சேதப்படுத்திய இருவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மடுகரை எம்.ஆர்.எஸ்., நகரைச் சேர்ந்தவர் காமராஜ், 66; இவர் மடுகரை - பட்டாம்பாக்கம் சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் கடை எதிரில் மடுகரை வாணித் தெருவை சேர்ந்த கிருஷ்ணராஜ் கடை நடத்தி வருகிறார். இதனால் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வருகிறது. காமராஜ் கடந்த 11ம் தேதி வழக்கம் போல் காலை கடையை திறந்தார். அப்போதுகிருஷ்ணராஜ் மற்றும் அவரது மகன் தினேஷ் ஆகியோர் காமராஜை, திட்டி செங்கல்லால் காமராஜ் கடை கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். இதில் கண்ணாடி காமராஜ் காலில் பட்டு அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காமராஜ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
06-Sep-2025