மேலும் செய்திகள்
போதையில் ரகளை செய்தவர் கைது
12-Jan-2026
அரியாங்குப்பம்: தவளக்குப்பம் கோவில் அருகே மது போதையில், ஆபாசமாக பேசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அபிேஷகப்பாக்கம் சாலை, தெப்பக்குளம் சிவன் கோவில் அருகில், இரண்டு பேர் மது போதையில், நின்று ஆபாசமாக பேசுவதாக தவளக்குப்பம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் அந்த இடத்திற்கு சென்று இருவரை பிடித்து, விசாரித்தனர். அவர்கள், சிங்கிரிகுடியை சேர்ந்த செந்தாமரைசெல்வன்,43; பெரியக்காட்டுப்பாளைத்தை சேர்ந்த திருமாறன், 24, என தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
12-Jan-2026