மேலும் செய்திகள்
பொது இடத்தில் ரகளை போதை வாலிபர் கைது
23-Jun-2025
அரியாங்குப்பம் : கஞ்சா விற்ற இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.அரியாங்குப்பம், சுப்பையா நகர் விளையாட்டு திடல் அருகே கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, அரியாங்குப்பம் போலீசார் அந்த பகுதியை சோதனை செய்தனர். அங்கு நின்ற வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் கஞ்சா வைத்து விற்பனை செய்ததை போலீசார் கண்டறிந்தனர்.அவர்கள், அரியாங்குப்பம், காமராஜர் நகரை சேர்ந்த ஆனந்த் மகன் கவுதம், 18; நாகப்பட்டினம் அடுத்த வேதாரண்யம் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் மகன் கவுதம், 18, என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 2 ஆயிரம் மதிப்புள்ள 8 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவரையும், கைது செய்து, கோர்ட்டில், ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
23-Jun-2025