உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக் திருடிய இருவர் கைது

பைக் திருடிய இருவர் கைது

புதுச்சேரி: நகரப் பகுதியில் பைக் திருடிய இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.பெரியக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சர்தார்வல்லபாய் பட்டேல் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் ஓட்டி வந்த பைக்கிற்கான ஆவணங்கள் எதுவுமில்லை. இதனால் அவர்கள் மீது சந்தேகமடைந்த போலீசார், அவர்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில் அவர்கள், தமிழ்நாடு, காஞ்சீபுரத்தை சேர்ந்த பரத்குமார் 19, சூர்யா, 18, என்பது தெரிய வந்தது. அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு பைக் என்பது தெரிய வந்தது. இதையடுத்து பரத்குமார், சூர்யா ஆகியோரை போலீசார் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி