உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரெஞ்சு குடியுரிமை பெற்றவருக்கு மிரட்டல்: இருவர் மீது வழக்கு

பிரெஞ்சு குடியுரிமை பெற்றவருக்கு மிரட்டல்: இருவர் மீது வழக்கு

புதுச்சேரி: பிரெஞ்சு குடியுரிமை பெற்றவருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். ரெட்டியார்பாளையம் கம்பன் நகரை சேர்ந்தவர் ரொலான் அல்பே,41; பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டிற்கு வந்த வயல்வெளி தெரு அனிஷ், புது நகரை சேர்ந்த ரமணா ஆகியோர் இரும்பு ராடால் கதவை உடைத்துள்ளனர். மேலும் ஆபாசமாக பேசிய இருவரும் சிராக் என்பவரிடம் பகைத்து கொள்ள வேண்டாம் என ரொலான் அல்பே குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இது குறித்து ரொலான் அல்பே கொடுத்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை