உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கல்லுாரி மாணவிகள் இருவர் மாயம்

கல்லுாரி மாணவிகள் இருவர் மாயம்

புதுச்சேரி: கல்லுாரி மாணவிகள் இருவர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மூலக்குளத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மகள் சினேகா,21; லாஸ்பேட்டை கல்லுாரியில் முதுகலை முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த 7ம் தேதி காலை கல்லுாரிக்கு சென்றவர், மாலை வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.தவளக்குப்பம் சடா நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் மகள் மீனாட்சி,18; புதுச்சேரியில் உள்ள அரசு மகளிர் கல்லுாரியில் பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 7ம் தேதி கல்லுாரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்த புகார்களின் பேரில் முறையே ரெட்டியார்பாளையம் மற்றும் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை