உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை வில்லியனுாரில் இருவர் கைது

சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை வில்லியனுாரில் இருவர் கைது

வில்லியனுார் : வில்லியனுார் அருகே கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.வில்லியனுார் அடுத்த ஜி.என்.பாளையம், நடராஜன் நகர் பகுதியில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பதாக வில்லியனுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.அப்போது அங்கு இருந்தவர்கள் போலீசாரை கண்டு தப்பியோடினர். அவர்களில் இருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், 34; சரண்ராஜ், 20, என்பதும், இருவரும் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலப்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை