உல்லாஸ் கல்வி சான்றிதழ் வழங்கல்
புதுச்சேரி: வில்லியனுார் அரசு தொடக்கப் பள்ளியில் உல்லாஸ் கல்வி சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு, தலைமை ஆசிரியர் ரேணுகா தலைமை தாங்கினார். உல்லாஸ் தன்னார்வல ஆசிரியர் மலர்விஜி வரவேற்றார். துணை ஆய்வாளர் திருவரசன் உல்லாஸ் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மணிமாறன், வெங்கடேசன், கிரிஜா, லட்சுமிகாந்தா, சுமதி, உதவியார் அமுதா செய்திருந்தனர்.