மேலும் செய்திகள்
முதியவர் சாவு போலீஸ் விசாரணை
06-Nov-2026
பாகூர்: விபத்தில் இறந்த அடையாளம் தெரியாத முதியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி – கடலுார் சாலை கன்னியக்கோவிலில், கடந்த 24ம் தேதி தனியார் மதுபான கடை அருகே, சாலையோரமாக அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த மகேந்திரா மினி லோடு வாகனத்தை டிரைவர் இயக்கி உள்ளார். அதன் முன் அமர்ந்திருந்த முதியவர் மீது வாகனம் மோதியதில் அவர் படுகாயமடைந்தார். புதுச்சேரி அரசு மத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. விபத்து குறித்து, கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இவரை பற்றி தகவல் தெரிந்தால், 0413 – 2611000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.
06-Nov-2026