மேலும் செய்திகள்
கொலையான நபர் யார்: போலீசார் விசாரணை
05-Nov-2026
புதுச்சேரி: உருளையன்பேட்டை செங்குந்தர் வீதியில் 50 வயது மதிக்கத்தக்கவர் கீழே விழுந்து அடிப்பட்ட நிலையில், கடந்த மாதம் 10ம் தேதி புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி கடந்த 3ம் தேதி இறந்தார். இவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போன்று, இ.சி.ஆர்., கருவடிகுப்பம் சாலையை கடந்த 35 வயது நபர் பைக் மோதி படுகாயமடைந்தார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 4ம் தேதி இறந்தார். இதுகுறித்து, போக்குவரத்து வடக்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
05-Nov-2026