உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மத்திய அமைச்சர் முதல்வருடன் சந்திப்பு 

மத்திய அமைச்சர் முதல்வருடன் சந்திப்பு 

புதுச்சேரி: புதுச்சேரியில் பா.ஜ., ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினார்.புதுச்சேரி மாநில பா.ஜ., நிர்வாகிகள், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் நல அமைச்சர் மன்சுக் மாண்டவியா, முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சட்டசபையில் சந்தித்து பேசினார்.இதில், சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், மாஜி மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நிர்மல் குமார் சுரானா ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !