உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  திருவள்ளுவர் அரசுப் பள்ளியில் ஒருமைப்பாட்டு நாள் விழா போட்டி

 திருவள்ளுவர் அரசுப் பள்ளியில் ஒருமைப்பாட்டு நாள் விழா போட்டி

புதுச்சேரி: திருவள்ளுவர் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் பண்பாட்டு ஒருமைப்பாட்டு நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் புதுச்சேரி மாவட்ட அளவிலான நகர்ப்புறங்களில் பயிலும் 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பங்கேற்று தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். தனி நடனம், குழு நடனம், தனிப்பாடல், குழு பாடல் முதலான போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. தாவரவியல் விரிவுரையாளர் அருணகிரி வரவேற்றார். பள்ளி முதல்வர் தினகர் தலைமை தாங்கினார். தமிழ் விரிவுரையாளர் கலைவாணி பாண்டியன் நோக்கவுரையாற்றினார். ஆங்கில விரிவுரையாளர் பிரேமலதா வாழ்த்தி பேசினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளியின் முதல்வர் தினகர் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டியின் நடுவர்களாக சிவசங்கரி, பங்கஜவல்லி, மாரியம்மாள், பிரசன்னா செயல்பட்டனர். ஆசிரியர் ஜீவிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை