ஒற்றுமை தின அணிவகுப்பு
புதுச்சேரி: வல்லபாய் பட்டேல் 150வது, பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஒற்றுமை தின அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. அணிவகுப்பு நிகழ்ச்சியை, துணைவேந்தர் பிரகாஷ் பாபு துவக்கி வைத்தார். தொடர்ந்து, உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில், பேராசிரியர்கள் கிளமென்ட் லுார்து, ரஜ்னீஷ் பூடானி, பதிவாளர் சுடலை முத்து, எஸ்.பி., வம்சித ரெட்டி, பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சதீஷ்குமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.