மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
20-Oct-2024
புதுச்சேரி : சீனாவில் நடக்கும் கியூபாவிற்கான ஆசிய பசிபிக் பிராந்தியங்களின் ஒருமைப்பாட்டு கூட்டத்தில், இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம் பங்கேற்கிறார்.சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில், கியூபாவிற்கான ஆசிய பசிபிக் பிராந்தியங்களின், 10 வது ஒருமைப்பாட்டு கூட்டம் இன்று முதல் வரும், 31ம் தேதி நடக்கிறது.சர்வதேச நாடுகளுக்கான சீன மக்கள் நட்புறவு கழகமும், கியூபா மக்கள் நட்புறவு அமைப்பும் இந்த நிகழ்வை ஒருங்கிணைக்கும் பணியை மேற் கொண்டு வருகின்றன.இக்கூட்டத்தில் இந்தியாவில் இருந்து பங்கேற்க, இ.கம்யூ., சார்பில் புதுச்சேரி மாநில செயலாளர் சலீம், நேற்று சீனா புறப்பட்டார். அவரை மாநில தலைமை அலுவலகம், வ.சுப்பையா இல்லத்தில் இருந்து, அக்கட்சியினர் வழி அனுப்பி வைத்தனர்.
20-Oct-2024