உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குப்பை அகற்றும் பணியை கண்காணிக்க வலியுறுத்தல்

குப்பை அகற்றும் பணியை கண்காணிக்க வலியுறுத்தல்

புதுச்சேரி : புதுச்சேரி கவர்னர், முதல் வர், கலெக்டர், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்களின் ஆணையர்களுக்கு மாணவர் மற்றும் பெற்றோர் நலச் சங்க தலைவர் பாலா அனுப்பியுள்ள மனு;புதுச்சேரியில் கழிவுநீர் சாக்கடையில் வண்டல் மண்ணை அள்ளும் பணியை தனியார் நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் கழிவுநீர் வாய்க்காலில் உள்ள வண்டல் மண்ணை மட்டும் வாராமல் தனியார் கட்டட கழிவு மண்ணை யும் அகற்றி, அதன் எடையை கணக்கிட்டு புதுச்சேரி அரசின் பணத்தை தவறான வழியில் பெற்று வருகின்றது.இதனால் புதுச்சேரி நகராட்சிக்கு பெருந்தொகை இழப்பு ஏற்படுகிறது. இப்பணியை கண்காணிக்க புதுச்சேரி நகராட்சியால் நியமிக்கப்பட்ட உதவி பொறியாளர், தற்போது புதுச்சேரி நகராட்சி வருவாய் பிரிவு 2 அதிகரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.தனியாரால் இடிக்கப்படும் கட்டட கழிவுகளை அந்தந்த கட்டட உரிமையாளர்களே அவர்களின் சொந்த செலவில் மக்களுக்கு எவ்வித இடையூறின்றி அகற்றிக் கொள்ள வேண்டும் என்பது நகராட்சி மற்றும் நகர குழுமத்தின் விதியாகும்.எனவே நகராட்சி, பொதுப் பணித்துறை மற்றும் அரசுக்கு இழப்பு ஏற்படாமல் இருக்க உரிய அதிகாரிக்கு அவருக்கு வழங்கப்பட்ட பணியை செய்திட உத்தரவிட வேண்டும். மக்களுக்கு எவ்வித சிரமும் இன்றி குப்பைகள் மற்றும் கழிவு நீர் வாய்க்காலில் உள்ள வண்டல் மண்ணை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ