உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தல்

 புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரி அனைத்து தொழிற்சங்கம் மற்றும் ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் , முதலியார்பேட்டை ஏ.ஐ.டி.யூ.சி., அலுவலகத்தில் நடந்தது. ஏ.ஐ.டி.யூ.சி., மாநில பொது செயலாளர் அந்தோணி தலைமை தாங்கினார். மாநில கவுரவ தலைவர் அபிஷேகம், மாநில தலைவர் தினேஷ் பொன்னையா, துணை தலைவர்கள் சந்திரசேகர், சேகர், செயலாளர் மூர்த்தி, சி.ஐ.டி.யூ., பொது செயலாளர் சீனுவாசன், துணை தலைவர் மதிவாணன், மாநில செயலாளர் மணிபாலன், ஐ.என்.டி.யூ.சி., பொது செயலாளர் ஞானசேகரன், ஜான், எல்.பி.எப்., மாநில அமைப்பாளர் அண்ணா அடைக்கலம், கலைவாணன், ஏ.ஐ.சி.சி.டி.யூ., பொது செயலாளர் புருஷோத்தமன், எல்.எல்.எப்., செயலாளர் கதிர்வேல், என்.டி.எல்.எப்., பொது செயலாளர் மகேந்திரன், ஐக்கிய விவசாயிகள் சங்க கீதநாதன், அக்ரி முருகன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில், புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர், ஒப்பந்த தொழிலாளர், திட்டம் சார்ந்த தொழிலாளர் உட்பட அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் 26,000 ரூபாய் வழங்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை