உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வைத்திலிங்கம் எம்.பி., பிறந்த நாள் கொண்டாட்டம்

வைத்திலிங்கம் எம்.பி., பிறந்த நாள் கொண்டாட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., தனது 75 வயது பிறந்தநாள் விழா காங்., நிர்வாகிகள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி, நேற்று காலை 8:30 மணிக்கு மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து காங்., நிர்வாகிகள் தங்கத்தேர் இழுத்தனர். காலை 9:30 மணியளவில் முல்லா வீதியில் உள்ள மவுலனா ஹஜ்ரத் சையது அகமத் மவுலனா சாய்பு தர்காவில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. காலை 10 மணிக்கு ரயில் நிலையம் அருகில் உள்ள துாய இருதய ஆண்டவர் பாசிலிகாவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. காலை 10:30 மணிக்கு வைத்திலிங்கம் எம்.பி., தனது இல்லத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள முன்னிலையில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.தொடர்ந்து நலத்திட்ட உதவிகள், அன்னதானம், வழங்கினார். விழாவில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ.. காங்., சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ், முன்னாள் துணை சபாநாயகர் பாலன்,முத்தியால்பேட்டை தொகுதி காங்., பொறுப்பளர் ஈரம் ராஜேந்திரன், இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு நடராஜன், நிர்வாகிகள் சண்முகம், நடராஜன், மோகன்தாஸ், பிரதீப், இருதயராஜ் உட்பட பலர் பங்கேற்று, வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ