வாஜ்பாய் பிறந்த நாள்
புதுச்சேரி: லாஸ்பேட்டையில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. லாஸ்பேட்டை தொகுதி பா.ஜ., சார்பில், அய்யனார் கோவில் மற்றும் இ.சி.ஆர்., ரோட்டில் அமைந்துள்ள ராஜ்ய சபா எம்.பி., அலுவலகம் ஆகிய இடங்களில் மறைந்த பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது உருவப்படத்திற்கு செல்வகணபதி எம்.பி., மலர் தூவி மரியாதை செய்தார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் லாசுப்பேட்டை தொகுதி தலைவர் பன்னீர்செல்வம், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.