வாணிதாசனார் படைப்பு வளங்கள் நுால் வெளியீட்டு விழா
புதுச்சேரி: திருவள்ளுவர் உலக சாதனையாளர் அமைப்பு, யோகி பதிப்பகம் இணைந்து நடத்தும் நான்காம் ஆண்டு அப்துல் கலாம் விருது விழா மற்றும் கவிஞரேறு வாணிதாசனாரின் படைப்பு வளங்கள் நுால் வெளியீட்டு விழா புதுவை தமிழ் சங்கத்தில் நடந்தது.சரவணன் மற்றும் வளர்மதி முருகன் தொகுத்து வழங்கிய 'கவிஞரேறு வாணிதாசனாரின் படைப்புவளம்' என்ற நுாலை, கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள் வெளியிட கவிஞர் ஐயை பொன்னுசாமி பெற்றுக் கொண்டார். விழாவிற்கு பேராசிரியர் அசோகன், சோமசுந்தரம் முன்னிலை வகித்தனர்.கலை பண்பாட்டு துறை இயக்குனர் கலியபெருமாள் வாழ்த்துரை வழங்கினார். புதுவை தமிழ் சங்க தலைவர் முத்து சிறப்புரையாற்றினார். செயலாளர் சீனு மோகன் தாஸ், ராசா, பொன்னுசாமி வாழ்த்துரை வழங்கினர்.விழாவில் 'கவிஞரேறு வாணிதாசனாரின் படைப்பு வளங்கள்' பன்னாட்டு கருத்தரங்கம் இரண்டு அமர்வுகளாக நடந்தது. அமர்வுகளின் தலைமையாக நல்லாசிரியர் வளர்மதி முருகன் மற்றும் பேராசிரியர் கிருஷ்ணா தலைமை வகித்தனர். கருத்தரங்கில் பங்கேற்ற கருத்தாளர்களுக்கு வாணிதாசன் ஆய்வுச் சுடரொளி விருது வழங்கப்பட்டது. மேலும், விழாவில் அப்துல் கலாம் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.